தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஐ.டி.என்.டி தொழில்நுட்ப நிறுவன மாநாட்டை சென்னையில் நடத்தியது.

Published Date: September 9, 2024

CATEGORY: CONSTITUENCY

புத்தாக்கமும், புத்தொழில்முனைவும் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழ்நாட்டை உந்தித் தள்ளும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் ஐ.டி.என்.டி தொழில்நுட்ப நிறுவன மாநாட்டை சென்னையில் நடத்தியது.

இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு வளர்ந்து வரும் மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்ப வெளியில் புதுமைகளை வளர்ப்பதில் பெருந்தொழில் நிறுவனங்களில் பங்கை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் புதுமை என்பது நமது புதிய மந்திரம். இது வெறும் முழக்கம் அல்ல; இது நடவடிக்கைகான  ஒரு மூலோபாய அழைப்பு. இது மாநிலத்தில் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான நமது உறுதிபாட்டை உள்ளடக்கியது.

புத்தாக்கமும், புத்தொழில் முனைவும் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழகத்தை உந்தித் தள்ளும். முதல்வரின் இலட்சிய பார்வையை நனவாக்குவதற்கு முக்கியமானவை. இந்த பயணத்திற்கு ஆதரவாக நாட்டிலேயே முதன்முறையாக ஆழ்நிலை தொழில்நுட்பக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. புத்தாக்க எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற முடியும். தொழில்துறை கூட்டாளர்களை ஐ.டி.என்.டி மையத்துடனான தங்கள் ஈடுபாட்டை மூலோபாய கூட்டமைகள் மற்றும் பெரு நிறுவனங்களில் சமூகப் பொறுப்பு, நிதி பங்களிப்புகள் மூலம் மிகைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.டி.என்.டி. யின் எதிர்கால 'புத்தாக்க சவால்களை திற' என்ற நிகழ்வில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு அமைச்சர் ₹4.5 லட்சம் ரொக்க பரிசுக்கான காசோலையை வழங்கினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய உலகத்திற்கான நிகழ்ச்சி, நேர தரவு வகுப்பாய்வு மற்றும் முடிவெடுத்தலில் தீர்வுகான பரிசை ஹெல்த்கேர் ஸ்டார்ட் அப் வியூகா மெட்டேட்டா வென்றது. வள நுகர்வு குறைப்புகளின் தீர்வுகான  பரிசை சஸ்டைன பிலிட்டி ஸ்டார்ட் அப்டெய்ஜோ வென்றது. வளங்கள் சங்கிலி வெளிப்படைத் தன்மை மற்றும் செயல்திறன் தீர்வுகான  வெற்றியாளராக கிளை மேட் டெக் ஸ்டார்ட் அப்க்களை மேட் குவாண்ட் டெக் தேர்வானது.

நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமார் ஜெயந்த், ஐ.டி.என்.டி. மையத்தின் தலைமை செயல் அலுவலர் வனிதா வேணு கோபால், ஆழ்நிலை தொழில்நுட்பத் துறையின் தொழில் நிறுவன மற்றும் பாடப்பொருள் வல்லுநர்கள் பங்கேற்றனர்.

Media: Dinakaran